ஆவின் பால் ஏன்.. தண்ணியாக இருக்கிறது.. அடித்து பிடித்த காட்சிகள்..! கையும் களவுமாக சிக்கினார்

0 977

மதுரை ஆவினுக்கு அனுப்பபடும் பால் கேன்களில் தண்ணீரை கலப்படம் செய்து ஆவினில் தொடரும் மோசடி குறித்து வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் நிர்வாகத்தில் தினசரி 1.20 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டுவருகிறது.

மதுரை சாத்தமங்கலம் ஆவின் மூலம் நாள் ஒன்றுக்கு 1.93 லட்சம் லிட்டர் பால் பாக்கெட்டுகள் மதுரை நகர் மற்றும் புறநகர் சுற்றியுள்ள பொதுமக்களுக்கு ஆவின் பால் டெப்போக்கள் மூலமாக பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுவருகிறது.

மதுரை மாவட்டம் கோப்பம்பட்டி பால் உற்பத்தி மையத்திலிருந்து ஆவின் பால் பண்ணைக்கு கொண்டு செல்லப்படும் பால்கேன்களில் ஓட்டுநர் தண்ணீரை கலப்படம் செய்யும் சம்பவத்தினை அந்த பகுதியில் இருந்த ஆவின் விரிவாக்க அலுவலர் கையும் களவுமாக பிடித்து பிடித்து சத்தம் போடும் வீடியோ வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக ஆவின் விரிவாக்க அலுவலர் ஒருவர் ஆவின் பால் பண்ணையில் நடைபெறும் முறைகேடுகள் தொடர்பாக வீடியோ ஆதாரங்களை வெளியிட்டுள்ளார்

அந்த வீடியோவில் ஆவின் வாகனங்கள் அதிக தூரத்திற்கு இயக்கப்பட்டு முறைகேடு நடைபெறுவதும் ஆவினிலிருந்து முகவர்களுக்கு விநியோகம் செய்யக்கூடிய பால் பாக்கெட்டுகளை திருடுவது பால் டப்பாக்களை திருடுவது உடைந்த பால் பாக்கெட்டுகளை திருப்பி தராதது என முறைகேடுகள் நடைபெற்றதை வீடியோ பதிவு செய்துள்ளார்

ஆவின் பால்பண்ணை லாரியிலிருந்து டீசல் திருடப்படுவதும் பாலில் தண்ணீர் கலப்படம் செய்வது தொடர்பான முழு வீடியோக்களையும் உரிய விளக்கத்தோடு பதிவிட்டுள்ளார்

மேலும் இது போன்ற முறைகேடுகளை வெளிக்கொண்டு வந்ததால் தன்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்போது தனக்கான ஊதியமும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார் .

இதுபோன்ற புகார்கள் தொடர்பாக பலமுறை உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்காமல் பணத்தைப் பெற்றுக் கொண்டு தவறு செய்பவர்களுக்கு உடந்தையாக இருப்பதாகவும் அவர்களுக்கு மீதான நடவடிக்கை எடுக்காமல் இது போன்ற முறைகேடுகளை வெளிக் கொண்டுவந்த தன் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அந்த வீடியோவில் தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments